×

மல்பெரி நாற்றுகளை வளர்த்து விவசாயிகள் லாபம் ஈட்டலாம்

கோவை,ஏப்.9: கோவையில் உள்ள மல்பரி விவசாயிகள் நாற்றுகள் வளர்த்து விற்பனை செய்வதன் மூலமாக கனிசமான லாபம் ஈட்ட முடியும் என்று பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  கோவை மாவட்டத்தில் 2,643 ஏக்கரில் 1,028 விவசாயிகள்மல்பரி விவசாய மேற்கொண்டு வருகின்றனர். மல்பரி நாற்றுகளை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையுள்ள பருவமழை மற்றும் சீதோஷன நிலையை பயன்படுத்தி நன்கு சாகுபடி செய்ய முடியும். இந்த நிலையில், விதைக்குச்சிகளை கொண்டு மல்பரி நாற்றுகளை சொந்த பயன்பாட்டிற்கு மட்டுமல்லாது, அதனை மற்ற விவசாயிகளுக்கு விற்பனை செய்வதன் மூலமாக மல்பரி விவசாயிகள் கனிசமான லாபத்தை ஈட்ட முடியும் என்கின்றனர் பட்டு வளர்ச்சி மைய அதிகாரிகள்.  இதுகுறித்து பட்டு வளர்ச்சி துறை மண்டல இணை இயக்குனர் அருள்மணி நிர்மலா கூறியதாவது:

விதைக்குச்சிகள் மூலம் மல்பரி நாற்றுகளை உற்பத்தி செய்ய ஏற்ற காலநிலை தற்போது நிலவி வருகிறது. மூன்று மாதங்களில் விதைக்குச்சிகளில் இருந்து நாற்றுகள் முளைத்து விற்பனைக்கு தயாராகிவிடும். இந்த நாற்றுகளை சொந்தபயன்பாட்டிற்கு வைத்து விவசாயம் மேற்கொள்ளலாம். அதிகமாக இருக்கும் நாற்றுகளை அருகில் உள்ள மற்ற விவசாயிக்கும் விற்பனை செய்யலாம்.  கோவை, சேலம் உட்பட 6 மையங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டலத்தை பொருத்தவரையில் நடப்பு ஆண்டில் புதிய விவசாயிகளை கொண்டு 2,920 ஏக்கர் பரப்பளவில் ஒரு கோடியே 75 லட்சத்து 200 நாற்றுகள் சாகுபடி செய்ய இயல்பு குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் 6 ஆயிரம் நாற்றுகளை நடவு செய்ய இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு மூலமாக நடப்பாண்டில் மல்பரி விவசாயம் பெருகும். இவ்வாறு அருள்மணி நிர்மலா கூறினார். கோவை பட்டு வளர்ச்சி மைய உதவி இயக்குனர் முருகானந்தம் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தை பொருத்தவரையில் இந்த மூன்று மாதங்களில் புதிய விவசாயிகளை கொண்டு 500 ஏக்கர் பரப்பளவில் 32.40 லட்சம் நாற்றுகள் சாகுபடி செய்ய இயல்பு குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.’’ என்றார்.

Tags :
× RELATED கோவை அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னரில் தேங்கிய மழைநீர் வெளியேற்றும் பணி