×

திமுக, கூட்டணி வேட்பாளருக்கு ராஜகண்ணப்பன் பிரச்சாரம்

சிவகங்கை, ஏப். 9:  திருப்புவனம் அருகே பழையனூரில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இலக்கியதாசன், சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். முன்னதாக கிராமம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் தென்னவன், திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், காங்கிரஸ் வட்டாரத்தலைவர்கள் மாரிமுத்து, செந்தில்குமார், மாவட்ட பொது செயலாளர்கள் ஜெயச்சந்திரன், சின்னையா, மதிமுக ஒன்றிய செயலாளர்கள் சேகர், முத்திருளு, இ.கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சுந்தரலிங்கம், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : Rajagopanan ,coalition candidate ,DMK ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு