×

நீடாமங்கலம் செல்லமுத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

நீடாமங்கலம்,ஏப்.9: நீடாமங்கலம் வெண்ணாறு லயன்கரையில் அமைந்துள்ள செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் 40ம் ஆண்டு பங்குனி திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நேற்று முன்தினம் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும்,காலை பக்தர்கள் வேண்டுதலின் பேரில்மயில் காவடி,அலகு காவடி,கரகம் பால்குடம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.மதியம் கஞ்சி வாத்த்தலும்,மாலை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து மாவிளக்கு அர்சனைகள் நடந்தது.இரவு சாமி வீதியுலா காட்சியும்,மகா தீபாராதனையும் நடந்தது.அதே போன்று பாமனியாறு அருகில் உள்ள முத்துமாரியம்மனுக்கு பக்தர்கள் பால்குடம்,அலகு காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

Tags : festivities ,festival ,Neemamangalam Chellamuthumariammanam ,
× RELATED மதுரை அழகர்கோயில் ஆடித்திருவிழா ஜூலை 13இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!