சீல் வைத்த ஓட்டல்களில் பணியாற்றிய 15 ஆயிரம் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம் கொடைக்கானலில் ஐபி.செந்தில்குமார் உறுதி

கொடைக்கானல், ஏப்.8: கொடைக்கானலில் சீல் வைக்கப்பட்ட ஓட்டல்களில் பணியாற்றிய 15 ஆயிரம் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம் என, ஐபி.செந்தில்குமார் எம்எல்ஏ தெரிவித்தார். திண்டுக்கல் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து ஐ.பி.செந்தில் குமார் எம்எல்ஏ நேற்று கொடைக்கானலில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், ‘‘எட்டு ஆண்டுகள்  தமிழகத்தில்  அதிமுக ஆட்சி செய்து வருகின்றனர். மக்களுக்கு  நன்மை செய்யாத ஆட்சியாக உள்ளது.  5  வருடம்  மதவாத பாஜ ஆட்சி இந்தியாவை  ஆண்டது. பிரிவினைவாதத்தை  தூண்டி  மதவாதத்தை  தூண்டி  மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆட்சிகள்  வீட்டுக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் கட்டாயம் தேவை  இதற்காக  திமுக கூட்டணியை  மக்கள் ஆதரிக்க வேண்டும்.

கொடைக்கானலில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாஸ்டர் பிளான் முறையானதாக  உருவாகவேண்டும். மாஸ்டர்பிளான் வருவதற்கு முன்பு பாதிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு ஒருமுறை வரைமுறைப்படுத்தும் திட்டத்தினை அரசு கொண்டு வரவேண்டும். தற்போது பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள ஓட்டல்களில்  பணியாற்றக்கூடிய 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களையும் பாதுகாக்க வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில் திண்டுக்கல் இளைஞரணி அமைப்பாளர் கணேசன், கொடைக்கானல் நகர செயலாளர் முகமது இப்ராஹிம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயக்கண்ணன், மேல்மலை ஒன்றிய செயலாளர் ராஜதுரை, முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் செல்லத்துரை, சுப்பிரமணியன், நகர இளைஞரணி அமைப்பாளர் குட்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Senthilkumar ,airplanes ,Kodaikanal ,
× RELATED துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்