×

இவ்வாறு ராசாமணி கூறினார். காட்சிமுனையை முறைப்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை

வால்பாறை, ஏப்.8: வால்பாறை பொள்ளாச்சி சாலையில் 9ம் கொண்டை ஊசி வளைவு மிகவும் பிரசித்திபெற்றது. லோம்ஸ் வியூபாய்ன்ட் என அழைக்கப்படும் இயற்கை காட்சி முனை. வால்பாறை வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் திறன்கொண்டது. காட்சி முனையில் இருந்து பார்த்தால் ஆழியார் அணையின் எழில் மிகு தோற்றம், மலைகளுக்கு இடையே செல்லும் வால்பாறை மலைவழிச்சாலை ஆகியவை காண்போரை வியக்கவைக்கும். பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் சென்றுவந்த காட்சிமுனை கடந்த சில மாதங்களாக வனத்துறையால், சுற்றுலாப்பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவதில்லை. புலிகள் காப்பக கோர் பகுதியில் உள்ள பாரம்பரிய சுற்றுலாத்தலங்களை திறந்து கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தும் கூட, பாரம்பரியமாக செயல்பட்டு வந்த 9வது கொண்டை ஊசி வளைவு  இயற்கை காட்சி முனையை வனத்துறை பொதுமக்கள் பார்வையிட தடைசெய்துள்ளது. ஆனால், வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் தடையை மீறி முள்வேலியை தாண்டி கண்டு ரசித்துவருகின்றனர்.
எனவே வனத்துறை தாமாக முன்வந்து பாதுகாப்பு வேலி போட்டு, பகல் காலை 6 மணி முதல் மாலை 6 வரை திறந்து, சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது. மேலும், பொள்ளாச்சி வனத்துறைக்கு நிர்வகிப்பதில் சிரமம் இருந்தால் அப்பகுதியை வால்பாறை வனச்சரகத்திற்கு ஒப்படைக்க வனத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது.

Tags : Rajamani ,
× RELATED ஒட்டன்சத்திரத்தில் திமுக உறுப்பினர் அட்டை வழங்கல்