×

அவினாசி ரோடு 8 வழி சாலையாக மாற்றப்படும்

கோவை, ஏப். 8: அவினாசி ரோடு எட்டு வழிச்சாலையாக மாற்றப்படும் என கோவை தொகுதி பா.ஜ வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கோவை  மக்களவை தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  தீவிர வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக, இடையர்பாளையம் மாரியம்மன்  கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை துவக்கினார். பி அண்ட் டி  காலனி, டிவிஎஸ் நகர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாமரை  சின்னத்துக்கு வாக்களியுங்கள் என தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது: யார்  பிரதமர் என சொல்ல முடியாத நிலையில் எதிர் கூட்டணியினர் உள்ளனர். அமேதி  தொகுதியில் தோற்றுவிட்டால் என்ன செய்வது? என எண்ணிய ராகுல், கேரள மாநிலம்  வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். வயநாட்டில் அவரை தோற்கடிக்க  கம்யூனிஸ்டுகள் வேலை செய்கிறது. ஆனால், அதே கம்யூனிஸ்ட்கள் தமிழகத்தில்  காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது.

மோடி பிரதமர் ஆனதும்,  தமிழகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என அப்போதைய தமிழக முதல்வர்  ஜெயலலிதாவிடம் கேட்டார். உடனே அவர், ஏழை மக்களுக்கு ஐந்து லட்சம் வீடுகள்  வேண்டும் என கேட்டார். அதை, கடந்த 5 ஆண்டு காலத்தில் வழங்கியவர்தான்  பிரதமர் மோடி. மக்களுக்கு தேவையான திட்டங்கள் எவை? என சிந்தித்து,  செயலாற்றும் வல்லமை படைத்தவர் பிரதமர் மோடி. நான், இத்தொகுதியில்  போட்டியிட்டு, எம்.பி.யாக இருந்தபோது கடந்த 2000ம் ஆண்டு ஒண்டிப்புதூர்  மேம்பாலம் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது. நாங்கள்  சொல்வதை, செய்து காட்டுவோம். உக்கடம்-சுங்கம் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள  ரயில்வே பாலமும், நான் எம்.பி.யாக இருந்தபோது கட்டப்பட்டது.

 முந்தைய  பா.ஜ.க ஆட்சியில், அனைத்து சாலைகளும் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது.  மோடி ஆட்சி காலத்திலும் இது தொடர்ந்தது. என்னை இத்தொகுதியில்  தேர்வுசெய்தால், கோவை அவினாசி சாலையை, நிச்சயம் 8 வழிச்சாலையாக மாற்றுவேன்.  நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பேன். இவ்வாறு வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார். பிரசாரத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் அருண்குமார், ஆறுக்குட்டி, வக்கீல் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். சடலமாக மீட்டனர். ரங்கநாதன் சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தளி இன்ஸ்பெக்டர் ராமசந்திரன்  வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags : Avinashi Road ,
× RELATED கோவை அவிநாசி சாலையில் அமைக்கப்படும்...