×

குருசுமலை திருப்பயணம் நிறைவு பிஷப்புகள் தலைமையில் திருப்பலி

அருமனை, ஏப். 8: 62வது குருசுமலை திருப்பயணம் மார்ச் 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பயண நாள்களில் காலை முதல் இரவு வரை மலையடிவாரத்திலும், மலை உச்சியிலும் திருப்பலி, ஜெப வழிபாடு, நற்கருணை ஆராதனை, சிலுவைப்பாதை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நிறைவு நாளான நேற்று காலையில் மலையடிவாரத்தில் அருள்பணியாளர் ஏசுதாஸ் தலைமையிலும், மலை உச்சியில் அருள்பணியாளர் அனில்மாவறா தலைமையிலும் திருப்பலி நடந்தது. தொடர்ந்து நற்கருணை ஆராதனை, ஜெபமாலை பாதயாத்திரை, ஜெபவழிபாடு ஆகியவை நடந்தது. இதனையடுத்து நெய்யாற்றங்கரை மறை மாவட்ட ஆயர் டாக்டர் வின்சென்ட் சாமுவேல் தலைமையில் ஆடம்பரக் கூட்டுத்திருப்பலி நடந்தது. மாலையில் மலை உச்சியில் கார்மல்கிரி குருகுல முதல்வர் டாக்டர் கிரகிரி தலைமையில் திருப்பயண நிறைவு ஆடம்பரத் திருப்பலியும், மலையடிவாரத்தில் குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெறோம்தாஸ் வறுவேல் தலைமையில் விழா நிறைவு ஆடம்பரத்திருப்பலியும் நடந்தது.

தொடர்ந்து குருசுமலை திருத்தல இயக்குனர் டாக்டர் வின்சென்ட் கே.பீட்டர் கொடியிறக்கி 62வது திருப்பயணத்தை நிறைவு செய்து 63வது திருப்பயணத்திற்கான வாசல் 2020 லோகோவையும் வெளியிட்டார். மாலையில் நடந்த விழா நிறைவு பொதுக்கூட்டத்திற்கு நெய்யாற்றங்கரை மறை மாவட்ட குருகுல முதல்வர் கிறிஸ்துதாஸ் தலைமை தாங்கினார். குருசுமலை திருத்தல பொதுச்செயலாளர் ஷாபு வரவேற்றுப் பேசினார். பாறசாலை எம்.எல்.ஏ. சி.கே.ஹரீந்திரன், டாக்டர் வின்சென்ட் கே.பீட்டர், அருள்பணியாளர் ரதிஷ்மார்க்கோஸ், விழா ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். அருள்பணியாளர் பிரதிப் ஆன்றோ நன்றி கூறினார்.

Tags : Tiruppally ,bishops ,
× RELATED வாடிகனில் ஆயர்கள் கூட்டம் கத்தோலிக்க...