×

பண்ணாரி அருகே வாகனம் மோதி புள்ளிமான் படுகாயம்

சத்தியமங்கலம், ஏப்.7: பண்ணாரி அருகே  சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து  ஏற்பட்டது. சத்தியமங்கலம்- பண்ணாரி சாலையில் புதுவடவள்ளியை அடுத்த ஏவிடி கம்பெனி அருகே சாலையில் புள்ளிமான் அடிபட்டு கிடப்பதாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அடிபட்டு கிடந்த புள்ளிமானை மீட்டு, பவானிசாகர் வன கால்நடை மருத்துவ மையத்திற்கு கொண்டு சென்றனர். வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் அடிபட்ட புள்ளிமானுக்கு சிகிச்சை அளித்து பவானிசாகர் வனப்பகுதியில் விட்டனர். அடிபட்ட ஆண்புள்ளி மான் 3 வயது மதிக்கத்தக்கது எனவும், வனச்சாலையில் வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்குமாறும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : vehicle crash ,Pannari ,
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம்...