கறம்பக்குடி அருகே தங்கை மாயம் அண்ணன் புகார்

கறம்பக்குடி, ஏப்.7:  கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி அருகே மஞ்சு விடுதி கிராமத்தை சேர்ந்த தம்பதியினர்   ரெத் தினவேலு-ராஜகுமாரி.  இவர்களது மகள்  சுகன்யா(23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). எம்.எஸ்சி.,பி.எட் படித்துள்ள இவர் கறம்பக்குடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து தற்போது அப்பணியிலிருந்து ஓராண்டுக்கு பின் நின்றுவிட்டார்.  இந்நிலையில் இவர் கடந்த 30ம் தேதி காலை  அரசு தேர்வு  எழுதிவிட்டு வருகிறேன் என்று தனது தாயிடம் சொல்லிவிட்டு சென்றவர் இதுநாள் வரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளிலும் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுகன்யாவின் சகோதரர் கருப்பையா கறம்பக்குடி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடிவருகின்றனர்.

Tags : Brother magic brother ,Karambukudi ,
× RELATED மீனவர்கள் எதிர்பார்ப்பு கறம்பக்குடி அருகே விஷம் குடித்து விவசாயி பலி