×

மீனவர்கள் எதிர்பார்ப்பு கறம்பக்குடி அருகே விஷம் குடித்து விவசாயி பலி

கறம்பக்குடி, ஜூன் 19: கறம்பக்குடி அருகே விவசாயி விஷம் குடித்து பலியானார்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சூறக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்லக்கண்ணு (60). இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததால் அடிக்கடி மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டு விட்டு மயங்கிய நிலையில் கடந்த இவரை உறவினர்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் ராஜப்பன் கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : fisherman ,Karambukudi ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டம் பனையூர்...