×

அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம்

தர்மபுரி, ஏப்.5: தர்மபுரி மாவட்ட தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாமக அன்புமணி, அதிமுக கோவிந்தசாமி, மற்றும் சம்பத்குமாரை ஆதரித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், இடைத் தேர்தல்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் சம்பத்குமார் (அரூர்), கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி) ஆகியோரை ஆதரித்து, தர்மபுரி மாவட்டம் அரூர், கம்பைநல்லூர், ஜாலிப்புதூர், பொம்மிடி, சோலைக்கொட்டாய் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில், டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேகையில்,  தமிழகத்தில் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால், அதிமுக தலைமையிலான ஆட்சி தொடர்ந்து நடைபெறும்.

ஆனால், இடைத் தேர்தலில் 10 தொகுதிகள் கூடுதலாக, 18 சட்ட பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். இந்தியாவில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பதவியில் இருக்கும் போது, 14 மாநிலங்களில் ஒரே நேரத்தில் கொண்டு வந்தார். அதேபோல்,  தர்மபுரியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைவதற்கும், அன்புமணியின் பங்கு மிக முக்கியமானதாகும். தற்போது, அவரது பெரும் முயற்சியால், மொரப்பூர்- தர்மபுரி ரயில் இணைப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார். இந்த கூட்டத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஷன், மாநில துணை தலைவர் அரசாங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

Tags : Ramdas ,PMO ,AIADMK ,
× RELATED சொல்லிட்டாங்க…