×

பாலக்கோடு அருகே தண்டவாளத்தில் வாலிபர் சடலம் மீட்பு

பாலக்கோடு, ஏப்.5: பாலக்கோடு அருகே தண்டவாளத்தில் வாலிபர் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலக்கோடு அருகே கடைமடை ரயில்வே கேட்டில், நேற்று காலை உடல் சிதறிய நிலையில் வாலிபர் இறந்து கிடந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், தர்மபுரி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர், பாலக்கோடு அருகே பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்(23) என்பதும், சிப்ஸ் கடையில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, சிவக்குமாரை யாராவது கொலை செய்து தண்டவாளத்தில் உடலை வீசி சென்றனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டார? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Balakode ,
× RELATED முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்