×

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஒகேனக்கல்லில் வாக்கு சேகரிப்பு

தர்மபுரி, ஏப்.5: தர்மபுரி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார், ஒகேனக்கல் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், டாக்டர் செந்தில்குமார் போட்டியிடுகிறார். இவர் நாடாளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நேற்று பென்னாகரம், பருவதனஅள்ளி, பவளந்தூர், ஊட்டமலை, ஒகேனக்கல் சுற்றுலா தளம் உள்ளிட்ட கிராமங்களில், நேற்று திமுக வேட்பாளர் செந்தில்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஒகேனக்கல் பகுதியில் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், கடை வியாபாரிகள், மீன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் வாக்குசேகரித்தார். அப்போது, நான் வெற்றிபெற்றால் 5ஆண்டுகளில் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில், உலகத்தரத்தில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை உலகத்தரத்திற்கு தரம் உயர்த்துவேன். பரிசல் ஓட்டிகளில் குறைகள் தீர்க்கப்படும். மீன் மார்க்கெட், சமையல்செய்யும் கூடம் நவீனமாக்கப்படும். மேலும், திமுக ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை எடுத்துக்கூறி திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் வாக்கு சேகரித்தார். இதில், ஒன்றிய செயலாளர்கள் ஏரியூர் செல்வராஜ், பென்னாகரம் செல்வராஜ் வானவில் சண்முகம், விநாயகம், காளி, குமார் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைப்பை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : constituency ,candidate ,DMK ,
× RELATED செலவு செய்ய பணமில்ல… பூரி காங்கிரஸ் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்