×

முதியவர்களை குறிவைத்து கைவரிசை ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதாக பல லட்சம் மோசடி செய்தவர் கைது

சென்னை: விருகம்பாக்கம் ஏடிஎம் மையத்தின் அருகே நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி வந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரது உடமையை சோதனை செய்தனர். அப்போது 30க்கும் மேற்பட்ட பல வங்கிகளின் ஏடிஎம் கார்டுகள் இருந்தது. உடனே அந்த நபரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.அதில், விருகம்பாக்கத்தை சேர்ந்த பார்த்தசாரதி (28) என்றும், அருகில் உள்ள அபுசாலி தெருவில் துணிக்கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.

இவர், மாலை நேரங்களில் ஏடிஎம் மையத்திற்கு வரும் முதியவர்களை குறிவைத்து பணத்தை எடுத்து தருவதாக அவர்களிடம் ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்டு போலி ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு மாயமாகி விடுவார். பின்னர் முதியவர்களின் ஒரிஜினல் கார்டை பயன்படுத்தி அவர்களின் வங்கி கணக்கில் இருந்து முழு பணத்தையும் எடுத்து வந்துள்ளார். இதுபோல் 50க்கும் மேற்பட்ட முதியவர்களின் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து மோசடி செய்து வந்ததும் தெரியவந்தது. அந்த பணத்தை வைத்து தனியாக துணி கடை ஒன்றையும் பார்த்தசாரதி நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரை கைது ெசய்து அவனிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட போலி ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் ெசய்தனர்.

Tags : fraudsters ,ATM ,
× RELATED கிருஷ்ணகிரியை அடுத்த...