×

நீடாமங்கலம் அருகே பூவானூரில் கிடப்பில் போடப்பட்ட தார்சாலை கப்பிகள் பெயர்ந்து மோசமாகும் அவலம்

நீடாமங்கலம், ஏப்.4:   நீடாமங்கலம் அருகில் பூவனூர் தட்டித்தெரு கப்பி சாலையை தார் சாலையாக விரைவில் சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் தனியார் நெல் அரவை மில் வழியாக பூவனூர் ஊராட்சி தட்டித்தெருவிற்கு சாலை ஒன்று செல்கிறது. இங்குள்ள தட்டித்தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து மாணவ, மாணவிகள் கல்வி கற்க நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலை கப்பி போட்டு நீண்ட நாள்களாக தார் போடாமலேயே இருந்ததது. கடந்த ஆண்டு இந்த செய்தி தினகரனில் படத்துடன் வெளியானது. இந்நிலையில் அதன்பிறகு தட்டி தெரு சாலை கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கப்பிகள் கொட்டி அதன் மீது சிகப்பு கறளை கப்பிபோட்டு ஓரளவு வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

  இது தொடர்பாக தட்டிதெருவை சேர்ந்த ஜெயபாலன் கூறுகையில், கடந்த ஆண்டு தினகரனில் சாலை சரியில்லை என படத்துடன் செய்தி வந்தது. அதன் பிறகு நாங்கள் அதிகாரிகளை சந்தித்து கடந்த மூன்று மாதத்திற்கு முன் இந்த சாலையில் கப்பி கொட்டி அதன் மீது சிகப்பு மண் போட்டு சாலை ஓரளவு சீரமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அதன் பிறகு சாலை பணி தொடங்காததால் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வந்துள்ள செம்மறியாடுகளை சாலையில் காலை மாலை  அடிக்கடி ஓட்டி செல்வதால் சாலையில் கப்பிகள் பெயர்ந்து மோசமாக உள்ளது. வயல் பகுதி என்பதால் இரவு நேரங்களில் சென்று வருவது சிரமமாக உள்ளது. மேலும் கப்பிகள் அதிகளவு பெயரும் முன் சாலையை தார் சாலையாக விரைவில் சீரமைக்க வேண்டும் என்றார்.

Tags : Neidamangalam ,Bhuvanoor ,
× RELATED மேட்டூரில் முன்கூட்டியே தண்ணீர்...