×

வாடிப்பட்டி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு

வாடிப்பட்டி, ஏப்.4: வாடிப்பட்டி பேரூராட்சியில் அண்மையில் அதிகரித்துள்ள தெரு நாய்கள் தொல்லையால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வாடிப்பட்டி பேரூராட்சி 18 வார்டுகளை கொண்ட பேரூராட்சி, இப்பகுதியில் கடந்த சில மாதமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. குறிப்பாக மெயின் ரோடு பகுதியில் இரவு நேரங்களிலும், அதிகாலையிலும் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. ஒரு சில நேரங்களில் சாலையோரமாக திரியும் நாய்கள் சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களுக்குள் புகுந்து விட்டு தப்பிச்சென்று விடுகின்றன. ஆனால் இருசக்கர வாகன ஓட்டிகளோ நிலை தடுமாறி கிழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். பெருகி வரும் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அவற்றினை பிடித்து ஆள் நடமாட்டம் இல்லா பகுதியில் கொண்டு சென்று விடவேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Vattipatti ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...