×

மொரப்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த பயணிகள் வலியுறுத்தல்

அரூர், ஏப்.3: மொரப்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ேவண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மொரப்பூரில் கடந்த 1861ம் ஆண்டு ரயில் நிலையம் தொடங்கப்பட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கியமான ரயில் நிலையமாக திகழும் இந்த ரயில் நிலையத்தில், 10க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்கின்றன. இரு மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள், தினசரி மொரப்பூர் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ரயில் நிலையத்தில் கழிவறை மற்றும் குடிநீர், டிக்கெட் வாங்குவதற்கான கூடுதல் கவுண்டர்கள், கடைகள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் பயணிகளுக்கு ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, மொரப்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ேவண்டும் என பயணிகள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Morpore Railway Station ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா