×

கறம்பக்குடி அருகே விசி கட்சி நிர்வாகி ரத்த காயங்களுடன் மீட்பு போலீசார் விசாரணை

கறம்பக்குடி, ஏப்.3: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆதியடிப்பட்டி கிராமத்தை  சேர்ந்தவர் சந்திர பாண்டியன் (38). இவர் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட விசி கட்சி  துணை செயலாளராக இருந்து வருகிறார். இவர் தினந்தோறும் கட்சி பணிகள் காரணமாக கறம்பக்குடி வந்து செல்வது வழக்கம். அதே போல நேற்று முன்தினம் இரவு கறம்பக்குடிக்கு வந்துவிட்டு இரவு 9 மணிக்கு தனது பைக்கில்  வீட்டிற்கு  திரும்பியுள்ளார்.பின்னர் சிறிது நேரம் கழித்து கறம்பக்குடி அருகே உள்ள வடக்கு புதுப்பட்டி  கிராமம்  அருகே  சந்திரபாண்டியன் ரத்த காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கறம்பக்குடி போலீசார் சந்திரபாண்டியனை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.   இது குறித்து சந்திரபாண்டியன் மனைவி ஈஸ்வரி தனது கணவரை மர்ம நபர்கள் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தியுள்ளதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : party administrator ,Karambukudi ,
× RELATED புதுக்கோட்டை மச்சுவாடி அரசு...