- எய்ட்ஸ் விழிப்ப
- மெல்லிச்சிவபுரி
- பொன்னமராவதி
- மெல்லிசிவபுரி
- எய்ட்ஸ்
- மெல்லிசிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி
- புதுக்கோட்டை மாவட்டம்
பொன்னமராவதி, டிச.18: பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் கல்லூரி மாணவர்களின் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மாணவர்களுக்கு எய்ட்ஸ் குறித்து கருத்துரை வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்தார். மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர் ராஜகணபதி எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து கருத்துரை வழங்கினார். செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் குறிஞ்சி ஒருங்கிணைத்தார்.
பேராசிரியர்கள் அழகம்மை, முருகேசன், பிருந்தா, ராஜா, குழந்தைவேல், கண்ணன் உட்படபலர் கலந்துகொண்டனர்.கல்லூரி மாணவர்களின் இந்த பேரணி கல்லூரியில் தொடங்கி அரசு ஆரம்பசுகாதார நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிவழியாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
