×

விராலிமலை நகர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

விராலிமலை, டிச. 20: விராலிமலை நகர் பகுதியில் இன்று மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெ.ஜேம்ஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, விராலிமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (20ம் தேதி) நடைபெறுகிறது.இதனால் விராலிமலை துணை மின்நிலையத்தில் 11 கேவி மின் பாதையில் மின்விநியோகம் பெறும் விராலிமலை நகர பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Viralimalai Nagar ,Viralimalai ,Electricity Board ,Executive Engineer ,J. James Alexander ,Substation ,Viralimalai… ,
× RELATED கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்