×

கும்மிடிப்பூண்டி அருகே தொகுப்பு வீடு இடிந்து பெண் படுகாயம்

கும்மிடிப்பூண்டி, ஏப்.3: கும்மிடிப்பூண்டி அருேக அரசு தொகுப்பு வீட்டின் ேமற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரு பெண் படுகாயமடைந்தார்.கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 10க்கும் மேற்பட்டோர் அரசு வழங்கியுள்ள தொகுப்பு வீடுகளில் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கோமளா (43), கணவர் சீனிவாசன் (45) ஆகியோர் இங்கு வசித்து வருகின்றனர். நேற்று 2 மணியளவில் கோமளா வீட்டில் சமையல் ெசய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் கான்கிரிட் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் கோமளாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், கோமளாவை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : house ,gummidipondi ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்