×

பாப்பிரெட்டிப்பட்டியில் போலீஸ் ஸ்டேஷனில் ரகளை செய்த விசிக பிரமுகர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 29: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பொம்மிடி அருகே பையர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் மாதன்(57). இவர் தனது விவசாய நிலத்தை, அருகில் உள்ள திலகவதி(30) என்பவருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. இது குறித்து இருதரப்பினரும், பொம்மிடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருந்தனர். இது குறித்து விசாரிப்பதற்காக, பொம்மிடி எஸ்ஐ மணிமாறன், இருதரப்பினரையும் அழைத்து நேற்று ேபச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாதனுக்கு ஆதரவாக, அவரது உறவினரான சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜான்பீட்டர்(39) என்பவரும் சென்றுள்ளார். ேபச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது, ஜான்பீட்டர் குறுக்கிட்டு ேபசியுள்ளார். அப்போது, ஜான்பீட்டரை அமைதியாக இருக்கும்படி எஸ்ஐ கூறினார். இதனால் ஆவேசமடைந்த அவர், தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில இணை செயலாளராக(கிறிஸ்தவ பிரிவு) இருப்பதாக கூறி, ேடபிளில் இருந்த கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். இதை தடுக்க ெசன்ற போலீஸ் ஏட்டு கலையரசன்(44) கையில் கண்ணாடி துண்டு பட்டதில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த ஏட்டு கலையரசன், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து, ஜான்பீட்டர் மீது,  அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தது, காவல் நிலையத்தில் அத்துமீறி நடந்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பின்னர், பாப்பிரெட்டிப்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : police station ,
× RELATED தேவர்குளம் காவல்நிலைய பிரச்சனை...