×

பாப்பிரெட்டிப்பட்டியில் திமுக ேவட்பாளர் வாக்கு சேகரிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 29: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில், திமுக வேட்பாளர் மணி வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தல், வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி திமுக ேவட்டாளர் மணி, பாப்பிரெட்டிப்பட்டி ேபரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் உள்ள வாக்காளர்களை வீடு, வீடாக ெசன்று அவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், திமுக நகர செயலாளர் ஜெயசந்திரன், காங்கிரஸ் நகர செயலாளர் மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வஞ்சி விடுதலை, சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் மாயக்கண்ணன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில், நகர செயலாளர் இஸ்மாயில், திமுக நகர செயலாளர் ஜெயசந்திரன் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : DMK Vote Collection ,
× RELATED திமுக வாக்கு சேகரிப்பு