×

கரூர் வெங்கமேடு அருகே தனியார் கொசுவலை நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

கரூர், மார்ச் 29:கரூர் வெங்கமேடு அருகே தனியார் கொசுவலை ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் நேற்று மாலை 5 மணியில் இருந்து 7 மணி வரை திருச்சி மற்றும் கோவையை சேர்ந்த 7 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நிறுவன வளாக அலுவலகத்துக்கு சென்று பணியாளர்களை வெளியே அனுப்பி விட்டு சோதனை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் சமயத்தில், கொசுவலை நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags : examination ,Income Tax Department ,Kosuvalai ,Karur Venkedu ,
× RELATED முல்லை பெரியாறில் புதிய அணை...