×

போலீசாரின் நடவடிக்கையால் ரோமியோக்கள் ஓட்டம்

சேத்தியாத்தோப்பு, மார்ச் 29: சேத்தியாத்தோப்பு புதிய பேருந்து நிலைய பகுதிமற்றும் ராஜிவ்காந்தி சிலை பேருந்து நிறுத்தத்தில் உள்ள கடைகள், நிழற்குடை, சிதம்பரம் சாலைகளில் பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் உள்ளிட்டோர் பேருந்துக்காக காத்திருப்பது வழக்கம். மேலும் தற்போது தேர்வு எழுதிவிட்டு அதிக மாணவிகள் வந்து விட்டு செல்கின்றனர். இவர்களை சிலர் கேலி கிண்டல் செய்வதும், ஆபாசமாக பேசுவதுமாக இருந்து வந்தனர். இதனை வீட்டிலோ, காவல் துறையினரிடம் சொன்னால் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டு விடும் என எண்ணி சொல்லாமலே மாணவிகள், பெண்கள் மறைத்து விடுகின்றனர்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன் துணிச்சலுடன் மாணவி ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் எதிரொலியாக சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ஜவஹர்லால் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். மேலும் காரணமின்றி பேருந்து நிறுத்த பகுதியில தினந்தோறும் சுற்றி வந்த ரோமியோ ஒருவனை பிடித்து சிறப்பாக கவனித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த அதிரடி செயலால் மாணவிகள் கூடும் இடங்களில் சுற்றித்திரிந்த இளைஞர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடிக்கின்றனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள், பெற்றோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இச்செயலை மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்களும், வர்த்தக வியாபாரிகளும் வரவேற்றுள்ளனர். இதுபோலவே காலை, மாலை நேரங்களில் போலீசார் கண்காணிப்பு பணி தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Romeo ,police action ,
× RELATED காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர்...