×

மிரட்டும் தேர்தல் பறக்கும் படையினர் கொடியை கழற்றிய பின்னரும் காரை பறிமுதல் செய்வேன்

திருமங்கலம், மார்ச் 28: கார்களில் உள்ள கொடியை கழற்றியபின்பும் கார்களை பறிமுதல் செய்வேன் என தேர்தல் பறக்கும் படையினர் மிரட்டுவதாக திமுகவினர் புகார் தெரிவித்தனர். திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பறக்கும்படையினர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் திமுக மாவட்ட துணை அமைப்பாளர் விஜய் நேற்று திருமங்கலம் விமான நிலையம் ரோட்டில் தனது காரில் திமுக கொடியுடன் வந்தார். சுங்குராம்பட்டி விலக்கு பகுதியில் வாகன தணிக்கையில் இருந்த பறக்கும்படையை சோந்த அதிகாரி மணிமாறன், எஸ்ஐ கணேசன் அடங்கிய குழுவினர் விஜய் வந்த காரை நிறுத்தினர்.
 பின்னர் காரில் உள்ள கட்சி கொடியை கழற்றும்படி கூறினர். அதே நேரத்தில் அதிமுக கொடியுடன் சில கார்கள் அந்த பகுதியை கடந்து சென்றன. பறக்கும்படையினர் அந்த வாகனத்தை நிறுத்தவில்லை.
அதே நேரத்தில் காரில் கட்சி கொடியை கட்டி வந்தால் இனிமேல் கார் பறிமுதல் செய்யப்படும் என கடுமையாக எச்சரிக்கை செய்தனர்.

இதனால் அதிருப்தியடைந்த திமுக மாவட்ட துணை அமைப்பாளர் விஜய் மற்றும் திமுகவினர் வந்து திருமங்கலம் தாலுகா அலுவலதத்தில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கார்களில் கொடியை கழற்ற கூறும் பறக்கும்படையை சேர்ந்த போலீசார் ஆளுங்கட்சியினரின் கார்களில் கொடியை கழற்ற கூறுவதில்லை. அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என புகார் தெரிவித்தனர். இதனால் பறக்கும் படையினரை கண்டித்து மறியல் செய்யபோவதாக விஜய் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தாசில்தார்கள் தனலட்சுமி, ஆனந்தி தலையிட்டு திமுகவினரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED பயிர்களின் பூஸ்டர்கள் பயன்பாடு: வேளாண் மாணவிகள் விளக்கம்