×

சேர்ந்தமரம் அருகே சூதாடிய 12 பேர் கைது

புளியங்குடி, மார்ச் 28: சேர்ந்தமரம் அருகே கடையாலுருட்டி பகுதியில் மனமகிழ் மன்றத்தின் பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாடி வருவதாக எஸ்ஐ உத்திரகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட அருணாசலபுரத்தைச் சேர்ந்த கோயில்கிருஷ்ணன் (60), சாம்பவர் வடகரையைச் சேர்ந்த சதக்அப்துல்லா (44), பக்கீர் முகைதீன் (38), செய்யதுஅலி (33), இப்ராகிம் (50), சுரண்டையைச் சேர்ந்த வரிசைக்கனி (27), ஹைதர்அலி (30), சேர்ந்தமரத்தைச் சேர்ந்த சந்தியாகப்பன் (40), ஊத்துமலையைச் சேர்ந்த வெயிலாட்சி (38), அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சரவணன் (48), சின்னத்தம்பி நாடானூரைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் (37) உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர்.

Tags : Gaddafi ,
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.