×

தனியார் நிறுவனத்தில் பிளாஸ்டிக் பைப்புகள் திருட்டு

நெல்லை, ஜூன்12: களக்காடு அடுத்துள்ள சிங்கிகுளத்தில் ஒரு தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. சிங்கிகுளம் தனியார் நிறுவனத்தில் பிளாஸ்டிக் பைப்புகள் வைக்கப்பட்டிருந்தன. இதை சம்பவத்தன்று மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மனித வள மேலாளர் சென்னையைச் சேர்ந்த சரண் ரவி, களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடு போன பிளாஸ்டிக் பைப்பின் மதிப்பு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.

The post தனியார் நிறுவனத்தில் பிளாஸ்டிக் பைப்புகள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Sinikulam ,Kalakadu ,Chennai ,Dinakaran ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்