×

போட்டித் தேர்வில் அரூர் ஜெயம் பள்ளி மாணவி சாதனை

அரூர், மார்ச் 27: அரூர் அருகே தொட்டம்மபட்டி ஜெயம் வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் போட்டித் தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.சேலம் சஹானா அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில், அரூர் அருகே தொட்டம்மபட்டியில் உள்ள ஜெயம் வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும், சமநெறி என்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதன் மூலம் ₹1லட்சம் ரொக்கப் பரிசாக பெற்றுள்ளார். இவரது தந்தை அன்பழகன். விவசாயி. தாய் ரஷியா. மேலும்  மற்றொரு மாணவி வர்ஷா ஊக்கப்பரிசு பெற்றுள்ளார். வெற்றிபெற்று சாதனை படைத்த மாணவிகளை, பள்ளியின் தலைவர் ரத்தினம், தாளாளர் கிருஷ்ணவேணி, செயலாளர் கனிமொழி, நிர்வாகி கிருஷ்ணன், முதல்வர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பாராட்டினர்.

Tags : Auram Jayam School ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா