ஆதிவாசி கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான்

பந்தலூர், மார்ச் 27: பந்தலூர் அருகே உள்ள வட்டக்கொல்லி ஆதிவாசி கிராமத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நேற்று நடந்தது .பந்தலூர் வருவாய்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. இதனை கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார் துவங்கி வைத்து பேசுகையில், ‘‘18 வயது நிரம்பிய அனைவரும் நேர்மையாக வாக்களிக்கவேண்டும், வளமான இந்தியாவை உருவாக்க வாக்களிப்பது அவசியம்,’என்றார்.  தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆதிவாசி மக்கள் மாரத்தான் ஓட்டம்  நடத்தினர். இதில் ஏராளமான ஆதிவாசி மக்கள் கலந்து கொண்டனர். இதில் பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் நடேசன் மற்றும் வருவாய் துறையினர் கலந்துகொண்டனர்.

Related Stories: