×

பாலமேடு கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா

அலங்காநல்லூர், மார்ச் 27: மதுரை மாவட்டம், பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நடந்தது. இதையொட்டி கருப்பணசுவாமி, மாரியம்மன், ஐந்துமுக விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பத்திரகாளியம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு கண்திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு பத்திரகாளியம்மன் மற்றும் மாரியம்மன் சிறப்பு அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மறுநாள் திங்கள்கிழமை காலை பக்தர்கள் தீசட்டி எடுத்தல், கரும்பு தொட்டில் உள்ளிட்ட பால்குடம் எடுத்து வந்தனர்.
மேலும் மாவிளக்கு, சாமி உருவபொம்மைகள், குழந்தை பொம்மைகள் போன்றவற்றை நேர்த்திக்கடன்களாக செலுத்தினர். தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பின்னர் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags : Pondal Festival ,Pithakaliyammam ,village ,Palamadu ,
× RELATED பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி...