×

இரவில் திறந்தவெளி பாராக செயல்படும் சிதம்பரம் ரயிலடி

சிதம்பரம், மார்ச் 27: புகழ்பெற்ற  சுற்றுலா தலமாக விளங்கும் சிதம்பரம் நகருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள்  தினந்தோறும் வந்து செல்கின்றனர். மேலும் சிதம்பரத்தில் அண்ணாமலை  பல்கலைக்கழகம் உள்ளதால் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் வந்து  செல்கின்றனர். சிதம்பரம் நகரில் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது சிதம்பரம்  ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் ரயில்வே பீடர்  சாலையில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. மதியம் 12 மணி முதல் இரவு 10  மணி வரை ஏராளமானோர் ரயில்வே பீடர் சாலையில் மதுபானம் அருந்துவதை  பார்க்கலாம்.இரவில் அதிகமான ரயில்கள் வருவதால் இந்த சாலையில் பெண்கள்   தனியாக நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். அப்பகுதியில் அரசு மகளிர் பள்ளி  வேறு உள்ளது.

மேம்பாலத்தின் கீழ் பகுதியில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக்  கப்புகள், வாட்டர் பாக்கெட்டுகள் கிடக்கின்றன. நடைபாதை மற்றும் பல  இடங்களில் பான்பராக், வெற்றிலை பாக்கு போடப்பட்டு துப்பப்பட்டுள்ளது. இரவு  நேரத்தில் ரயிலடி மேம்பாலத்தின் கீழே பல்வேறு சமூக விரோத செயல்கள்  நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஆகையால் ரயிலடி பகுதியில் இயங்கும் அரசு மதுபான  கடையை ஒதுக்குபுறமான இடத்திற்கு மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை  எழுப்பியுள்ளனர். இரவு நேரத்தில் சிதம்பரம் ரயிலடி பகுதியில் போலீஸ்  அதிகாரிகள் வலம் வந்து சீர்கேடுகளை களைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்  என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Chidambaram Raidi ,sponsor ,
× RELATED ஸ்பான்சர் பெறும் தொகைக்கு வரி...