×

முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்

திருமயம்,மார்ச்27:அரிமளம், ஓணாங்குடியில் பங்குனி திருவிழாவையொட்டி நடைபெற்ற பால்குடம், காவடி எடுப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திகடன் செலுத்தினர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஓணாங்குடி முத்துமாரியம்மன், வீரமாகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 17ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 24ம் தேதி காப்பு கட்டப்பட்டு நேற்று முதல் திருவிழா தொடங்கிய நிலையில் அப்பகுதியில் உள்ள பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் நோக்கில் பால்குடம், மயில் காவடி, பறவை காவடி, அக்னி காவடி எடுத்து வழிபட்டனர். முதலில் ஓணாங்குடி ஊரணிகரை பெருமாள் கோயிலில் இருந்து காவடி, பால்குடம் எடுக்கப்பட்டு ஓணாங்குடி முக்கிய வீதி வழியாக வந்து அம்மன் கோயிலை வந்தடைந்தது.  இதனை தொடர்ந்து கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  இதே அரிமளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவின் கடைசி நாளான நேற்று பால்கும், காவடி எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.


Tags : Muthuramaniyamman ,devotee ,Kavadai Parvati ,
× RELATED பக்தர்களை காக்கும் பக்த அனுமன்