×

அமமுக நிர்வாகியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற 2 பேர் கைது

திருப்பூர், மார்ச் 26:  திருப்பூரில் அமமுக நிர்வாகியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் போயம்பாளையம் நஞ்சப்பா நகரை சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் கொங்கு மெயின் ேராடு எம்.எஸ்.நகர் பகுதியில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். மேலும் அமமுக கட்சியில் கொங்கு நகர் பகுதி செயலாளராகவும் உள்ளார். இவரது பெட்ரோல் பங்க்-கிற்கு அருகில் உள்ள பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்நிலையில் சுரேசுக்கும் திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்தவரும் திருப்பூரில் தங்கி கொங்கு மெயின் ரோட்டில் பனியன் நிறுவனம் நடத்தி வருபவருமான கணேஷ் பாண்டி என்பவருக்கும், கடந்த இரு வாரங்களுக்கு முன் பிரச்னை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இருவரும் எம்.எஸ்.நகர் கருப்பராயன் கோயில் அருகே வைத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் சுரேஷை, கணேஷ் பாண்டி கத்தியால் வெட்ட, பதிலுக்கு அவரது கத்தியைப் பறித்து சுரேஷ் கணேஷ் பாண்டியை வெட்டியுள்ளார். இச்சம்பவம் தொர்பாக இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார், சுரேஷின் நண்பரான பாலா மற்றும் கணேஷ் பாண்டியின் நண்பரான சிவா ஆகியோரை தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, கணேஷ் பாண்டி தாக்கப்பட்டதையறிந்த அவரது சகோதரர் சதீஷ் பாண்டி ரமேஷின் பெட்ரோல் பங்க்-கிற்கு, தனது நண்பருடன் சென்று, ரமேஷ் தான் சுரேசுக்கு ஆதரவாக செயல்படுவதாக எண்ணி அவரை கை, கால்களில் கத்தியால் குத்தியுள்ளார். பிறகு திருப்பூர் பிச்சம்பாளையம் தாயம்மாள் லே-அவுட் பகுதிக்குள் ரத்தக் கறை படிந்த கத்தியுடன் சுற்றித் திரிந்த அவரை பொதுமக்கள் பிடித்து, தர்ம அடி கொடுத்து மாநகர போலீசாரடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் சதீஷ் பாண்டி (31), அவரது நண்பரான அரியலூரை சேர்ந்த கார்த்திக் (28) என்பவரையும் நேற்று கைது செய்தனர்.

Tags : persons ,administration ,Ammukan ,
× RELATED நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில்...