×
Saravana Stores

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

அரூர், மார்ச் 26: அரூர் சட்டமன்ற தொகுதியில், இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியில், இடைத்தேர்தலில் திமுக சார்பில் கிருஷ்ணகுமாரும், அதிமுக சார்பில் சம்பத்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், நேற்று அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான புண்ணியகோடியிடம் திமுக வேட்பாளர் கிருஷ்ணகுமார், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாற்றுவேட்பாளராக சென்னகிருஷ்ணன் தாக்கல் செய்தார். அப்போது, திமுக நகர செயலாளர் முல்லைசெழியன், விடுதலை சிறுத்தைகள், சிபிஎம் குமார், ஒன்றிய செயலாளர்கள் செங்கனி, தேசிங்குராஜன், சண்முகநிதி ஆகியோர் உடனிருந்தனர்.

அதே போல் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணகுமார், தனது வேட்பு மனுவை தேர்தல் அலுவலர் புண்ணியகோடியிடம் நேற்று தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக சாமிகண்ணு மனுவை தாக்கல் செய்தார். அப்போது, உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன், பாமக தலைவர் ஜிகே.மணி, தமாகா ஜெகதீசன் ஆகியோர் உடனிருந்தனர். அதே போல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திலீப் என்பவரும், வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள், நேற்று தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், திமுக சார்பில் மணி போட்டியிடுகிறார். இவர், நேற்று பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் கீதாராணியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது, தொகுதி ெபாறுப்பாளர் இளங்கோ, விசி தொகுதி பொறுப்பாளர் தமிழ்அன்வர், கொமதேக செந்தில்முருகன், வட்டார காங்கிரஸ் தலைவர் வேலன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

 இதேபோல், அதிமுக சார்பில் போட்டியிடும் கோவிந்தசாமி, நேற்று பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாராணியிடம், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக மொரப்பூர் மதிவாணன் மனு தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர் கே.பி.அன்பழகன், பாமக தலைவர் ஜி.கே.மணி, வேலுசாமி, வரதராஜன், விஸ்வநாதன், சத்தியமூர்த்தி, தம்பிஜெயசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : DMK ,AIADMK ,constituency ,Peppertipatti Assembly ,
× RELATED சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கு...