×

பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஐஜேகே வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

பெரம்பலூர், மார்ச் 26: பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணி சார்பில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் (எ) பச்சமுத்து வேட்புமனு தாக்கல் செய்தார். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் தலைவரான பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையொட்டி நேற்று பாலக்கரையில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலையிட்டு மரியாதை செய்து விட்டு ஊர்வலமாக வந்து பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சாந்தாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். பெரம்பலூர் திமுக மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 4 பேர் உடனிருந்தனர். அதிமுக வேட்பாளர் மனுதாக்கல்: பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் கட்சியின் முன்னாள் அமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளருமான என்.ஆர்.சிவபதி போட்டியிடுகிறார். இதையொட்டி நேற்று பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சாந்தாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேல், பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன், பாமக மாநில துணை பொது செயலாளர் வைத்திலிங்கம், தேமுதிக மாவட்ட செயலாளர் துரைகாமராஜ் உடனிருந்தனர்.

Tags : candidate ,IGK ,election ,Perambalur ,
× RELATED செலவு செய்ய பணமில்ல… பூரி காங்கிரஸ் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்