×

சங்கரன்கோவில் அருகே வேல்ஸ் பப்ளிக் பள்ளி விளையாட்டு தின விழா

சங்கரன்கோவில், மார்ச் 26:  சங்கரன்கோவில் அருகே வடக்கு புதூர் வேல்ஸ் பப்ளிக் பள்ளியில் 5வது ஆண்டாக விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் முருகராஜ் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக இயக்குநர் வேலம்மாள், துணைத்தலைவர் சிவபாலன், பொது மேலாளர் பார்த்திபன், மதுரை எடு ஸ்போர்ட்ஸ் நிர்வாகி ரமேஷ் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் தேன்மொழிபாலன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற டாக்டர்கள் சங்கரன்கோவில் ரசாக், கடையநல்லூர் சுப்பிரமணியன் ஆகியோர், சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வென்ற பள்ளி மாணவர்கள், வேல்ஸ் ஐடிஐ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். விழாவில் ஐடிஐ முதல்வர் சிவக்குமார், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்களது பெற்றோர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


Tags : Wales Public School Sports Festival ,Sankarankoil ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை