×

சாத்தான்குளத்தில் தமாகா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சாத்தான்குளம், மார்ச் 26: சாத்தான்குளம் வட்டார தமாகா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு  தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன் தலைமை வகித்து பேசினார். மாவட்ட மகளிரணி தலைவி தங்கத்தாய் பிரபாகரன் முன்னிலை வகித்தார். சாத்தான்குளம் வட்டாரத் தலைவர் முரசொலிமாறன் வரவேற்றார். கூட்டத்தில் தமாக தொண்டர்கள் ஒருங்கிணைந்து அதிமுக கூட்டணி கட்சி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் வெற்றிக்கு பாடுவது, தூத்துக்குடி மாவட்டத்துக்கு பிரசாரத்துக்கு வரும் மாநில தலைவர் ஜி.கே. வாசன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு கட்சியினர்  திரண்டு வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சேசுராஜ், ஆழ்வார்திருநகரி வட்டாரத் தலைவர் இளையராஜா, மாவட்ட செயலாளர் ரவிக்குமார், வட்டார செயலாளர் அய்யாக்குட்டி, வட்டார இளைஞரணி தலைவர் எமல்டன், வட்டார செயலாளர் சிவபாலன், நகர துணைத் தலைவர் ஆவுடையப்பன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகரத் தலைவர் விஜய் நன்றி கூறினார்.

Tags : Dhamaka Administrators Consultative Meeting ,Sattankulam ,
× RELATED தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக...