×

தர்மபுரி மாவட்டத்தில் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்

தர்மபுரி, மார்ச் 22: தர்மபுரி மாவட்டத்தில், திமுக தலைவர் முக ஸ்டாலின் 2 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான முக ஸ்டாலின், தர்மபுரி மாவட்டத்தில் 2 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று (22ம்தேதி) மதியம் 1 மணிக்கு சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு வருகிறார். அதியமான் அரண்மனையில் மதிய உணவு சாப்பிடுகிறார். மாலை 5 மணிக்கு கடத்தூரில் வியாபாரிகள் சந்திப்பு நிகழச்சியிலும், 5.30 மணிக்கு சிந்தல்பாடி விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பேசுகிறார். ஒடசல்பட்டி கூட்ரோடு அருகே நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கலந்து கொண்டு பேசுகிறார். அன்று இரவு தர்மபுரியில் தங்குகிறார். 23ம் தேதி காலை 9மணிக்கு கம்பைநல்லூரில் வியாபாரிகள் சந்திப்பு கலந்தாய்வும், 10 மணிக்கு அரூர் அண்ணா சிலை அருகே பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முக ஸ்டாலின் பேசுகிறார். பின்னர் திருவண்ணாமலை செல்லும் வழியில் அரூர் நரிப்பள்ளியில் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடல் நடத்துகிறார் என்றார்.

Tags : tour ,Stalin ,Dharmapuri district ,
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...