×

கல்வியாளர்கள் குற்றச்சாட்டு திருப்பங்குன்றம் அருகே அதிமுகவிற்கு எதிராக கையெழுத்து இயக்கம்

திருப்பரங்குன்றம், மார்ச் 21: திருப்பரங்குன்றம் அருகில் உள்ள கிராமங்களில் அதிமுகவிற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தென்பழஞ்சி கிராமத்தில் யாதவ சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். யாதவ சமுதாயத்தை புறக்கணித்த அதிமுக வை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்கும் முடிவோடு யாதவ சமுதாய மக்கள் செயல்பட வேண்டும் என்ற முடிவெடுத்து இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர். இதன் மூலம் ராஜ கண்ணப்பனின் தலைமையை ஆதரிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் கூறினர். அத்துடன் அனைத்து கிராமத்திற்கும் சென்று அதிமுகவை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்த இருப்பதாக கூறினர்.

Tags : Academics ,Supreme Court ,
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...