×

ஊட்டச்சத்து உட்கொள்ளுதலின் பலன் குறித்து ஆம்வே அறிமுகம்

சேலம், மார்ச் 21: ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சமச்சீர் ஊட்டச்சத்து உட்கொள்ளுதலின் பலன்களை விளம்பரப்படுத்தும் மற்றும் ஆதரிக்கும் வகையில், ஈட் ஹார்ட் ஈட் ஸ்மார்ட் பிரசார செயல்திட்டத்தை, ஆம்வே அறிமுகம் செய்துள்ளது. ஆம்வே இந்தியா, தலைமை சந்தையாக்கல் அலுவலர் சுந்தீப்ஷா அறிமுப்படுத்தினார். உடலின் தினசரி ஊட்டச்சத்து தேவைப்பாட்டில் ஏற்படும் குறைபாடுகளை, முறையாக துணை உணவுகளின் வழியாக ஈடேற்றிக் கொள்ளலாம். மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் காரணமாக, இந்த ஊட்டச்சத்து இடைவெளி மேலும் விரிவடைந்துள்ளது. பொருத்தமான ஊட்டச்சத்து உட்கொள்ளுதல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியாகவும், ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்வதன் நேரடி தாக்கம் குறித்தும், ஆம்வே பிரசாரம் செய்கிறது. பிரசார செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனம் ஆம்வே நேரடி விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு, அவர்களது வழக்கமான உணவு முறையில், ஊட்டச்சத்தின் தினசரி தேவைப்பாடுகள் குறித்து மேலும் கற்பிக்கவுள்ளது.

Tags : Amway ,
× RELATED ஆர்டிஸ்ட்ரி என்ற பெயரில் புதிய சரும தயாரிப்புகள் ஆம்வே அறிமுகம்