×

போலீசாரை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வில்லியனூர், மார்ச் 21:  வில்லியனூர் அடுத்த சேதராப்பட்டு பகுதியில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தொழிலாளர் நலச்சட்டங்கள் படி சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்படாமலும் பணி நியமன ஆணை, சம்பள ரசீது, இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராமல் உள்ளதாகவும் தெரிகிறது. இதுசம்பந்தமாக ஊழியர்கள், தொழிலாளர்கள் சங்கம் துவங்கி நிர்வாகத்திடம் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் சங்க நிர்வாகிகள் சிலரை தொழிற்சாலை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பாக ஏஐடியுசி மாநில தலைவர் சிவக்குமார் நேரில் சென்று கேட்டதற்கு தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக கூறி சேதராப்பட்டு காவல் நிலையத்தில் நிர்வாகத்தினர் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முருகன் சிவக்குமார் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தொழிற்சாலை நிர்வாகத்தின் புகாரை ஏற்று தொழிற்சங்க தலைவர் மீது நடவடிக்கை எடுக்க துடிக்கும் காவல்துறையை கண்டித்து சோசலிஸ்ட் யூனிடி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்ட்) கட்சி சார்பில் சேதராப்பட்டு பஸ் நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி மாநில செயலாளர் லெனின் துரை தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இதில் தொழிற்சங்க மாநில செயலாளர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : protesters ,
× RELATED இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த நடவடிக்கை...