×

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு பிறந்தநாள்

திருச்சி, மார்ச் 14: திருச்சியில் நேற்று பிறந்தநாள் விழா கொண்டாடிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தமிழ்நாடு வியாபாரிகள்  கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வெ.கோவிந்தராஜுலுக்கு வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.தமிழ்நாடு  வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தமிழ்நாடு வியாபாரிகள்  கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வெ.கோவிந்தராஜுலு தனது பிறந்தநாள்  விழாவை திருச்சியில் நேற்று மனைவி மற்றும் மகளுடன் கேக் வெட்டி  கொண்டாடினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர்  ஏ.எம்.விக்கிரமராஜா தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு  தொழிலதிபர்கள் ஜோசப்லூயிஸ், மக்கள் அண்ட் மங்கள் உரிமையாளர் மூக்கப்பிள்ளை,  பி.ஜி.நாயுடு பாலாஜி, பெமினா அபுபக்கர், கே.எம்.எஸ்.ஹக்கீம், குரு  ரெங்கநாதன், அஹமத் பிரதர்ஸ் ஏ.கே.உசேன், அஸ்வின் ஸ்வீட்ஸ் கணேசன், மங்களம்  புரோமோட்டர் முரளி, சில்பா ரெங்கராஜன், லட்சுமி ஜூவல்லரி ஈஸ்வரமூர்த்தி,  கே.டி.எம்.மளிகை ஜெயக்குமார், காவேரி ரவிசங்கர், காங்கிரஸ் கட்சி மாவட்ட  தலைவர் கலை, தேமுதிக மாநில மாணவரணி செயலாளர் விஜய்குமார், தமிழ்நாடு நாயுடு  பேரவை மாநில பொதுச் செயலாளர் கண்ணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்  பேரமைப்பு திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர்  ஸ்ரீதர், இணை செயலாளர்கள் எஸ்பி ஆனந்தன், கருப்பையா, ராஜாங்கம், மாவட்ட  இளைஞரணி தலைவர் அப்துல்ஹக்கீம், துணைத் தலைவர்கள் வைத்திலிங்கம்,  ‘மாவட்டம்’ ரஹீம்,  ராவுத்தர், மாவட்ட இணை செயலாளர் அப்பாதுரை, மாநில  மருந்து வணிகர் சங்க தலைவர் மனோகரன், காவேரி மோட்டார்ஸ் மணிவண்ணன் ஆகியோர்  பி.கோவிந்தராஜுலு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து  தெரிவித்தனர்.

Tags : Tamilnadu Trading Societies Association ,state general secretary ,Govindarajulu ,
× RELATED மழையால் பாதித்த பயிர்களுக்கு...