×

சேந்தமங்கலத்தில் கொமதேக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சேந்தமங்கலம், மார்ச் 14: சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் தலைமையில் சேந்தமங்கலத்தில் நடந்தது. இதில் சட்டமன்ற தொகுதி  பொறுப்பாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் சூர்யமூர்த்தி கலந்து கொண்டு,    நாடாளுமன்ற தேர்தலில் 40  தொகுதியிலும் திமுக கூட்டணி அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற நமது  கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்று பேசினார்.   கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் நித்யானந்தம், ரகுபதிராகவன், வடிவேல்,  சிவராஜ், உட்பட ஒன்றிய செயலாளர்கள் பேரூர் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Cummatical ,administrators ,consultation meeting ,Senthamangalam ,
× RELATED அதிமுகவில் சென்னை மண்டலத்தை சேர்ந்த 15...