×

வரத்து அதிகரிப்பால் சப்போட்டா கிலோ ₹20க்கு விற்பனை

தர்மபுரி, மார்ச் 12: தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் சப்போட்டா சாகுபடி செய்துள்ளனர். இதுதவிர, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை மற்றும் ஓசூர் சந்தையில் இருந்து தர்மபுரி நகருக்கு அதிகளவில் சப்போட்டா பழம் அதிகமாக விற்பனைக்கு வருகிறது. தற்போது சீசன் தொடங்கியுள்ளதால், கிலோ ₹60க்கு விற்பனையான சப்போட்டா, விலை குறைந்து கிலோ ₹20க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த பழத்தில் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், விட்டமின் சி, கால்சியம் சத்து இருப்பதாலும், விலை குறைவாக இருப்பதாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Tags : Sapota ,
× RELATED சப்போட்டா மில்க் ஷேக்