×

கோடை வெயில் துவங்கும் முன்பே 102 டிகிரியை தொட்டது வெயில்

ஈரோடு, மார்ச் 8: ஈரோட்டில் கோடை வெயில் துவங்கும் முன்பே நேற்று 102.2 டிகிரி வெயில் சுட்டெரித்ததால் வாகன ஓட்டிகள் அனல் காற்றால் அவதியடைந்தனர். ஈரோட்டில் கோடை காலம் துவங்கும் முன்பே கடந்த 15 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், மதிய நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடக்கின்றனர்.

பகல் நேரத்தைவிட இரவு நேரத்தில் வெயிலின் உக்கிரத்தால் ஏற்பட்ட புழுக்கத்தால் மக்கள் தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதில், ஈரோட்டில் நேற்று அதிகபட்சமாக 102.2 டிகிரி வெயில் சுட்டெரித்தது. மதிய நேரத்தில அனல் காற்று வீசியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். வெயிலின் உஷ்ணம் தாங்கமால் மக்கள் ரோட்டோரம் இருந்த நுங்கு, இளநீர், குளிர்பான கடைகளுக்கு சென்று தாகத்தை தணிக்க ஆர்வத்துடன் சென்றனர். மேலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வெயிலின் தாக்கத்தால் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : Winters ,
× RELATED பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில்...