×

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் மனு

ஈரோடு, மார்ச் 7:   7  அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நேற்று மனு அளித்தனர். வீடு கட்டும் தொழிலாளிகளுக்கு இலவச வீடு வழங்க வேண்டும், விபத்து சிகிச்சை, நிவாரண தொகை வழங்க வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு பேறுகால நிதியாக 6 மாதம் ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும், இயற்கை மரண உதவி தொகை உயர்த்தி வழங்க வேண்டும், விபத்து மரண இழப்பீடு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் அரசு ஏற்று கொள்ள வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் சங்க தலைவர் சின்னசாமி தலைமையில் கட்டிட தொழிலாளர்கள் ஏராளமானோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிடம் வழங்கிய மனுவில், கட்டிட தொழிலாளர்களின் 7 அம்ச கோரிக்கைகளை மாநில அரசு தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


கிறிஸ்துவர்கள் மனு: ஈரோட்டில் பிரப் சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான கிறிஸ்தவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பிரப் சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதை திரும்ப பெறக்கோரி நேற்று சிஎஸ்ஐ, பெந்தேகோஸ்தே, ரோமன்கத்தோலிக் மற்றும் பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்தனர். பின்னர் நிருபர்களிடம் கிறிஸ்தவர்கள் கூறியதாவது: ஈரோடு நகர மன்ற தலைவராக விளங்கிய பிரப் பல்வேறு மருத்துவ, கல்வி சேவைகளை வழங்கி உள்ளார். இதன் நினைவாக பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து அரசு மருத்துவமனை வரை உள்ள சாலைக்கு பிரப் சாலை என பெயர் வைக்கப்பட்டு கடந்த 80 ஆண்டாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி நடந்த மேம்பாலம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரப் சாலையை மீனாட்சி சுந்தரனார் சாலை என மாற்றி இருப்பது ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. எனவே மீண்டும் பிரப் சாலை என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கிறிஸ்தவர்கள் கூறினர்.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...