×

புதுவை ஆசிரம விடுதியில் புகுந்து லேப்-டாப், 5 செல்போன் திருடிய கிளியனூர் தொழிலாளி கைது

புதுச்சேரி,  மார்ச் 6:   புதுவை, ரங்கப்பிள்ளை வீதியில், ஆண்களுக்கான ஆசிரம தங்கும்  விடுதி உள்ளது. இங்கு கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் ஆண்கள்  தங்கியுள்ளனர். இவர்கள் தங்கியிருக்கும் அறைகள் எப்போதும் திறந்தே  இருக்குமாம். சம்பவத்தன்று இவ்விடுதியில் ஒருவரது  லேப்-டாப் மட்டுமின்றி 5 பேரின் செல்போன் மாயமானது. இதுகுறித்து விடுதி  காப்பாளர் ஹரிஷர்மா பெரியகடை போலீசில் புகார் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர்  செந்தில்குமார் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான  போலீசார் வழக்குபதிந்து விசாரணையை
தீவிரப்படுத்தினர். அங்குள்ள  கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரித்ததில் துப்பு  துலங்கியது. சம்பவத்தன்று அந்த விடுதிக்குள் பெரிய மார்க்கெட்டில் தட்டுவண்டி ஓட்டிவரும் தொழிலாளியான விழுப்புரம் மாவட்டம், கிளியனூரைச்  சேர்ந்த ராஜா (25) சென்று திரும்பியது தெரியவந்தது.

இதையடுத்து அவரை  சந்தேகத்தின்பேரில் பிடித்து நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில்  அவர், ஆசிரம விடுதியை நீண்டநாட்களாக நோட்டமிட்டு யாரும் இல்லாத நிலையில்  கிடந்த அறைகளுக்குள் சென்று செல்போன்களை திருடியதை ஒப்புக் கொண்டார்.  இதையடுத்து அவரிட
மிருந்து லேப்டாப், 5 செல்போன்களை காவல்துறை பறிமுதல்  செய்து சிறையில் அடைத்தது. சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த காவலர்களை கிழக்கு எஸ்பி மாறன் பாராட்டினார்.

Tags : Kilinoor ,lap-tap ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...