×

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று துவக்கம்

புதுச்சேரி, மார்ச் 6:  கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று தொடங்குகிறது. இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவுக்கு முன்பாக 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடை பிடிப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் தவக்காலம் துவங்கும் புதன்கிழமையன்று குருத்தோலை சாம்பல் நெற்றியில் பூசப்படுவதால் அந்நாளை சாம்பல் புதன் என்று அழைக்கின்றனர். இன்று (6ம்தேதி) துவங்கும் சாம்பல் புதன் அன்று ஒரு நேரம் மட்டுமே உணவு உண்ணும் நோன்பு கடைபிடிக்கப்படும். மேலும் தவக்காலத்தில் தொடரும் 6 வெள்ளிக்கிழமைகளில் கிறிஸ்தவ ஆலயங்கள் தோறும் சிலுவைபாடுகளை தியானிக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறும். இதற்காக புதுச்சேரியில் அனைத்து கத்தோலிக்க திருச்சபை தேவாலயங்களில் நெற்றியில் குருத்தோலை சாம்பல் பூசும் நிகழ்ச்சி இன்று திருப்பலியுடன் நடக்கிறது.

இதற்காக கடந்த ஆண்டு குருத்தோலை நாளன்று வழங்கப்பட்ட குருத்தோலைகள்  அனைத்தும் கோயில்களில் சேகரிக்கப்பட்டு அவை எரித்து சாம்பலாக்கி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதை திருப்பலி நிறைவேற்றும் அருட்தந்தையர்கள், மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய்... மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய்... என்பதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொருவரின் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு தவக்காலத்தை தொடங்கி வைப்பார். சிஎஸ்ஐ உள்ளிட்ட மற்ற சபைகளிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 19ம்தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனிதவெள்ளி அனுசரிக்கப்படுகிறது. தொடர்ந்து ஏப்ரல் 21ம்தேதி இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

Tags : Lenten ,Christians ,Gray Bud ,
× RELATED மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்துடன் சேர்க்க கோரிக்கை