×

கும்பகோணம் அருகே கொத்தனாரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது 2 பேருக்கு வலைவீச்சு

கும்பகோணம், மார்ச் 6: கும்பகோணத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த கொத்தனாரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ராம்நிவாஸ் மகன் அசோக்குமார் (20). இவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 2 மாதங்களாக கட்டிட வேலையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் பைராகி தோப்பு பகுதியில் அசோக்குமார் நடந்து சென்றார். அப்போது தமிழ் மொழி தெரியாதா, எங்களிடம் தமிழில் பேச வேண்டுமென 4 வாலிபர்கள் தகராறு செய்தனர். மேலும் அசோக்குமார் தாக்கி விட்டு செல்போனை பறித்து விட்டு சென்றனர். படுகாயமடைந்த அசோக்குமார், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் அசோக்குமார் புகார் செய்தார். அதன்பேரில் சிவகுருநாதன் தெருவை சேர்ந்த ஸ்ரீநாத் (20), அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த ரமேஷ் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மலர்வாணன், பிரவின்குமாரை தேடி வருகின்றனர்.

வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்டிஓவிடம் மக்கள் மனு கும்பகோணம், மார்ச் 6: வீட்டுமனை பட்டா கேட்டு கும்பகோணம் ஆர்டிஓவிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். கும்பகோணம் அடுத்த திருவிசைநல்லூர், இடையாநல்லூர், திருமங்கலக்குடி, ஏனநல்லூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக வீட்டு மனை கேட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று  கும்பகோணம் பக்தபுரி ரவுண்டானாவிலிருந்து ஊர்வலமாக சென்று ஆர்டிஓவிடம் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் தவச்செல்வம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். அதில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், 550 சதுர அடியில் தரமான வீடுகளை கட்டித்தர வேண்டும், வீட்டுமனை பெறுவதை சட்டமாக்க வேண்டும். அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். ஏழை மக்களை கந்து வட்டி கொடுமையில் இருந்து காப்பாற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : men ,Kondan ,Kumbakonam ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...